Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவியின் உயிரை பறித்த அரசு பேருந்து! கொந்தளிப்பில் ஊர் பொதுமக்கள்!

Government bus that took the life of a student! The public in turmoil!

Government bus that took the life of a student! The public in turmoil!

மாணவியின் உயிரை பறித்த அரசு பேருந்து! கொந்தளிப்பில் ஊர் பொதுமக்கள்!

தற்சமயம் ஆக தமிழகத்தில் பேருந்து விபத்துக்கள் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே உள்ளது. பேருந்தில் உள்ள படிகளில் மாணவர்கள் நின்று கொண்டு பயணிப்பதால்  கீழே விழுந்து பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஒரு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது.

பேருந்தின் படியில் மக்கள் தொங்கிய நிலையில் செல்கிறார்களோ அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு தக்க  தண்டனை வழங்கப்படும் என்றவாறு கூறியிருந்தனர்.

இவ்வாறான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டும் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி தற்போது பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என்பதால் பல அரசு ஓட்டுநர்கள் பெண்கள் நின்று கொண்டிருந்தாலும் அவர்களை ஏற்றிக் கொள்ளாமல் செல்கின்றனர்.

இது மாதிரியான புகார்களும் தொடர்ந்து எழுந்த வண்ணமாகவே காணப்படுகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு பேருந்தால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நவ்யா ஸ்ரீ என்ற மாணவி தினந்தோறும் அரசுப் பேருந்தில் அவரது கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்வார். அவ்வாறு செல்லும் பொழுது அவர் இறங்கவேண்டிய நிறுத்தத்தில் பேருந்து நிற்கவில்லை. அதனால் மாணவி படியிலிருந்து இறங்கும் முயன்று கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதனை கண்ட மக்கள் மாணவியை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் மாணவி நவ்யா ஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நவ்யா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி பேருந்து நிற்காமல் சென்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கூறி வருகின்றனர்.மேற்கொண்டு இதுபோல சம்பவம் நடக்காமல் இருக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Exit mobile version