ஒருபுறம் பழைய ஓய்வூதிய திட்டத்தை கேட்கும் அரசு ஊழியர்கள் மறுபுறம் அதனை மறுத்து அரசு ஊழியர்களுக்கு மேலும் மேலும் கஷ்டத்தை கொடுக்கும் மத்திய மற்றும் மாநில அரசு.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நிரந்தர பணி மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என அனைத்தையும் எதிர்த்து ஜாக்டோ ஜியோ அமைப்பானது போராட்டம் நடத்த துணிந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சம்பளம் ரத்து செய்யப்படும் என தெரிவித்து மாநில அரசு அடாவடி காட்டியது. இது ஒரு புறம் இருக்க தற்பொழுது மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி ஓய்வுதியதாரர்களின் வயதை அதிகரிக்க முடியாத என நேரடியாக மறுத்திருக்கிறது.
இது குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமானது வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் என பலரும் ஓய்வூதியத்தை உயர்த்த சொல்லி கோரிக்கை வைத்த பொழுது அவர்கள் பணிபுரியக்கூடிய துறைகளை சார்ந்த ஓய்வுதிய வயதானது 58 முதல் 60 வயது வரை என மத்திய அரசு வெளியிட்டிருந்தது. ஆனால் தற்பொழுது பொதுவாக 62 வயதை ஓய்வூதிய வயதாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததை அடுத்து ஓய்வூதிய வயதில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என நேரடியாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இப்பொழுது இருக்கக்கூடிய அரசானது தங்களை மிகவும் கஷ்டமான சூழலுக்கு இழுத்த செல்வதாக இருக்கிறது என்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒரு பணியாளரின் உடைய இறுதித் தொகையில் 50 சதவிகிதம் அரசால் வழங்கப்படும் ஆனால் இப்பொழுதுள்ள ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 38 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் தங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுப்பது குறித்து அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.