இனி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கார் மற்றும் பைக்குகளில் வர தடை! ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!
தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்பொழுது தான் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் சரிவர நடந்து வருகிறது. அவ்வாறு இருக்கையில் அனைத்து அலுவலகங்களிலும் தற்போது வரை கொரோனா தொற்றின் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் பரிணாம வளர்ச்சி அடையும் போதெல்லாம் அதற்கு ஏற்றார் போல அதிக அளவு விளைவுகளையும் சந்திக்கின்றனர். அந்த வகையில் தற்போது காற்று மாசுபாடு பெரும் பாதிப்பாக உள்ளது. உலக அளவிலேயே அதிக அளவு காற்று மாசுபாடு கொண்ட 30 நகரங்களில் இருபத்தி இரண்டு நகரம் இந்தியாவில்தான் உள்ளது. அதுமட்டுமின்றி நமது இந்தியாவில் வருடந்தோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நச்சுத்தன்மை கொண்ட காற்றை சுவாசிப்பதால் உயிரிழக்கின்றனர்.
இவ்வாறு இருக்கையில் அதிக அளவு காற்று மாசுபாடு அடைந்துள்ள நகரங்களில் டெல்லி முதன்மை வகிக்கிறது. காற்று மாசுபாடு மோசமான நிலையை அடைந்து சூழலால் ஊரடங்கு போடும் நிலைக்கு டெல்லி நகரம் தள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்திருந்தனர். வீட்டில் இருப்பவர்களே மாஸ்க் அணிந்து இருக்கும் வகையில் டெல்லி அதிக அளவு காற்று மாசுபாட்டை சந்திக்க நேரிட்டது. இதனை தடுக்கவும் டெல்லி அரசு பல நடவடிக்கைகளை தற்போது வரை தொடர்ந்து எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இந்த அளவிற்கு காற்று மாசுபடுவதற்கு டெல்லியில் சுற்றி நடைபெறும் கட்டிட பணிகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை மேலும் டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா போன்றவற்றில் விவசாயிகள் பயிர்களின் கழிவுகளை தீ வைப்பதால் வெளிவரும் புகை இதுவே முக்கிய காரணமாக கூறுகின்றனர். நமது தமிழகத்திலும் காற்று மாசுபாட்டை தடுக்க தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி புதன்கிழமைகளில் அரசு ஊழியர்கள் ,அலுவலகத்திற்கு வண்டிகளிளும் அல்லது மகிழுந்து களிலும் வரக்கூடாது என்று கூறியுள்ளார். அதற்கு மாற்றாக காற்று மாசுபாட்டை தடுக்கும் விதத்தில், பேருந்துகளிலும் அல்லது நடந்தோ அவர்களது அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மக்களின் பார்வையில்,மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியதை அரசு ஊழியர்கள் முறையாக கடைபிடிக்கப்படுவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு இவர் வெளியிட்ட அறிவிப்பிற்கு பல மக்கள் தங்களது கருத்துகளை இணையதளங்களில் குவித்து வருகின்றனர். சொல்லியவரே இதனை பின்பற்றுவாரா இன்றும் பலர் கேள்விகளை எழுப்புகின்றனர். ஒரு நாளில் இவ்வாறு அரசு ஊழியர்கள் செய்வதினால் எந்த வகையில் காற்று மாசுபடுவதை தடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் சிலர்,வண்டிகளில் வெளிவரும் புகை காற்றை மாசடைய செய்கிறதா என எடுக்கப்படும் சோதனை நேர்மையாக நடக்கிறதா என்பதை கண்டுபிடித்தாலே பாதி மாசுபாட்டை கட்டுப்படுத்திவிடலாம் என்றும் கூறுகின்றனர்.