தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான அறிவிப்புகளை செய்து வருகிறார். மேலும், மேகதாது அணை பிரச்சனை தீர்க்கவும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். இதனை அடுத்து வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கங்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று வந்துவிடக்கூடாது என்பதற்காக தேர்வு அனைத்தையும் ரத்து செய்து உள்ளார். இதன் மூலமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இத்தகைய நிலையில் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்தும் அவர், பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி வருகிறார். அனைத்து உதவிகளையும் அவர் அவரால் முடிந்த வரை செய்து வருகிறார். இந்த நிலையில், தற்போது நேற்று கைத்திறன், துணிநூல், கைத்தறி மற்றும் கதர் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
மேலும், அவர் அப்போது அரசு ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் இரண்டு முறை கைத்தறி ஆடைகளை கண்டிப்பாக உடுத்த வேண்டும் என்று கூறினார். மேலும், அனைத்து வயதினருக்கும் ஏற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
”கைத்தறியை உயர் வருவாய் பிரிவினர் இடம் கொண்டு சென்று நெசவாளர்களின் வருவாயை உயர்த்த வேண்டும்” என பல அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்கியுள்ளார்.