Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கையும் களவுமாக மாட்டும் அரசு ஊழியர்கள்! ஐகோர்ட் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

கையும் களவுமாக மாட்டும் அரசு ஊழியர்கள்! ஐகோர்ட் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

நமது தமிழ்நாட்டில் மக்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து நலத்திட்டங்களும் நேரடியாக மக்களுக்கு வந்தடைவதில்லை.அதில் பாதி அரசு ஊழியர் லஞ்ச பெருச்சாளிகளே எடுத்துக்கொண்டு ஊழல் செய்கின்றனர்.அதும் இந்த காலக்கட்டத்தில் அதிக அளவு அவ்வாறு தான் நடக்கிறது.இதனைத் தடுக்கும் விதமாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிரபித்துள்ளது.

அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுவது,அரசின் நலத்திட்டங்களை அமல்படுத்தும் அதிகாரிகளே ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.அது நீதிபதிகளாகிய எங்களுக்கு மிகவும் வேதனைத்  தரும் காரியமாக உள்ளது.அதனால் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் சாதாரண மக்களை சென்றடைகிறதா என்று தெரியவில்லை.அதனால் அரசுப் ஊழியர்கள் மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அனைத்து பத்திரபதிவு அலுவலங்களிலும் ஊழல் தடுப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிரபித்துள்ளது.அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களின் சொத்துகளை ஆய்வு செய்ய அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.இது நடைமுறைக்கு வரும் வேளையில் சிறிதளவு ஊழல்கள் குறையும் என அனைவரும் பேசி வருகின்றனர்.

Exit mobile version