Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.19,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு! வாங்க விண்ணப்பம் செய்யலாம்..!!

#image_title

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.19,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு! வாங்க விண்ணப்பம் செய்யலாம்..!!

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இயல் இசை நாடக மன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
அதன்படி சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஜனவரி 02 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: இயல் இசை நாடக மன்றம்

பணி:

1)சுருக்கெழுத்து தட்டச்சர்

2)தட்டச்சர்

3)அலுவலக உதவியாளர்

4)இளநிலை உதவியாளர்

காலி பணியிடங்கள்: மொத்தம் 04

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதிபெற்ற கல்வி வாரியத்தில் 8 அல்லது 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்க விருப்பம் இருக்கும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை : தபால் வழி

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி விருப்பம் இருக்கும் நபர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

உறுப்பினர் – செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை – 600028.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02-01-2024

Exit mobile version