Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவர் பலி! அதிர்ச்சி தகவல்

டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவர் பலி! அதிர்ச்சி தகவல்

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதும், அதில் சிலர் பலியாகி வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அரசு மருத்துவர் பிருந்தா என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மதுரை விசாலாட்சிபுரத்தை சேர்ந்த பிருந்தா என்பவர் சிவகங்கை மாவட்டம் அரசலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு இருந்தார்.

இதனையடுத்து அவர், மதுரை பிபி.குளம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த செவ்வாயன்று அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவர் ஒருவரே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version