Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு வேலை: 84 லட்சம் மோசடி செய்த நபர் கைது!

அரசுத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி தொழில் அதிபர் உட்பட பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் ஷார்ஜில் பின் ஃபரீத் என்பவர் அரசு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, தொழிலதிபர் உட்பட பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

ரவீந்தர் என்பவர் கூறிய புகாரின் பேரில், “தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஷார்ஜில் பின் ஃபரீத் கூறியதால், அவரை நம்பி பணத்தை கொடுத்தேன். அவர் என்னை ஏமாற்றி விட்டார்” என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ரவீந்தர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்த போது, அவர் போலி நியமன கடிதங்களை அனுப்பி அவரிடம் பணம் பெற்றுள்ளார்.

இதனடிப்படையில் ஷார்ஜீலை போலீசார் கைது செய்தனர். அவர் இதுவரை பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 84 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Exit mobile version