Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆஸ்கார் விருது வென்ற பெள்ளிக்கு அரசு வேலை… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு…

ஆஸ்கார் விருது வென்ற பெள்ளிக்கு அரசு வேலை… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு…
ஆஸ்கார் விருது வென்ற யானை பராமரிப்பாளர் பெள்ளி அவர்களுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அரசு வேலைக்கான ஆணையை வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் தெப்பக்காடு யானைகள் பராமரிப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் தாய் யானையை பிரிந்த ரகு, பொம்மி என்ற குட்டி யானைகளை பழங்குடியினத்தை சேர்ந்த தம்பதி பொம்மன் மற்றும் பெள்ளி இருவரும் பராமரித்து வந்தனர்.
இவர்களுக்கும் குட்டி யானைகளுக்கும் இடையேயான பாச உறவை மையமாக வைத்து தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் என்ற ஆவணத் திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த எலிபெண்ட் விஸ்பர்ஸ் ஆவண திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து பொம்மன் பெள்ளி தம்பதியினருக்கு பல இடங்களிலும் இருந்தும் பரிசுத் தொகையும் பாராட்டுகளும் குவிந்தது. இரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பினர். அது மட்டுமில்லாமல் பொம்மன் பெள்ளி தம்பதியினர் தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் திரைப்படம் மூலமாக உலகப் புகழ் பெற்றனர்.
இதையடுத்து தெப்பக்காடு யானைகள் முகாமில் பெள்ளி அவர்கள் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். இதையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தற்காலிக யானை பராமரிப்பாளர் பெள்ளி அவர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ளார்.
இதையடுத்து முதல் பெண் காவடியாக அதாவது முதல் பெண் யானை பராமரிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பெள்ளி அவர்களுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார்.
Exit mobile version