Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருவொற்றியூரில் களமிறங்கும் சீமான்! அதிரடி பிரச்சாரம்!

சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டியிருக்கிறது நாம் தமிழர் கட்சி 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் என்று தமிழகம் முழுவதும் அந்த கட்சியின் சார்பாக போட்டியிட இருக்கிறார்கள். எல்லோரையும் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் .இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். அறிமுக கூட்டத்திற்கு பின்னர் சீமான் தன்னுடைய தொகுதியில் முதல் நாள் பரப்புரையில் ஈடுபட்டு இருக்கின்றார். திருவொற்றியூர் தேரடி, பர்மா காலனி, தலாக் குப்பம் போன்ற இடங்களில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அந்த சமயத்தில் அனல் மின் நிலையத்தை உருவாக்கி மக்கள் மீது சாம்பலை தூவி அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்ததோடு அவர்கள் வாழும் இடத்தையும் சாம்பலாக்கி வருகிறார்கள். இந்த தொகுதியில் காட்டுப்பள்ளியில் 6000 ஏக்கர் இடத்தை அதானி என்ற கார்ப்பரேட் முதலாளி வசம் வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.அந்தக் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராக சமாதானமாக செல்லாமல் துணிந்து நிற்கும் பிரபாகரன் தம்பி உங்களை நம்பி திருவொற்றியூர் தொகுதியை தேர்ந்தெடுத்து எதிர்வரும் சட்டசபையில் நிற்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைந்தால் எல்லோருக்கும் இலவசமாக தரமான கல்வியை கொடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல அரசாங்க பள்ளிகளில் படிக்கும் எல்லோருக்கும் அரசு வேலை என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க இருக்கின்றோம் எனவும் அவர் உறுதி கூறியிருக்கிறார். இலவசங்களையும், கவர்ச்சித் திட்டங்களையும், தெரிவித்து மக்கள் எல்லோரையும் ஏமாற்றுவதற்கு நாங்கள் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மக்களுடைய வாங்கும் திறனை உயர்த்த முயற்சி செய்யப் போவதாகவும், தண்ணீர் விற்பனைக்கு தடை செய்ய இருப்பதாகவு,ம் அவர் பிரசாரத்தின்போது தெரிவித்திருக்கிறார்.சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து அதிரடி காத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி 117 ஆண் வேட்பாளர்கள் 117 பெண் வேட்பாளர்கள் என்று தமிழகம் முழுவதும் அந்த கட்சியின் சார்பாக போட்டியிட இருக்கிறார்கள் எல்லோரையும் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் .

Exit mobile version