INDIA: இந்திய நாட்டில் “IAS, IPS” போன்ற உயரிய அரசு பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்ய, இந்திய அரசாங்கம் “யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்” என்ற அமைப்பை நிறுவி உள்ளது.
இது நமது நாட்டில் “IAS, IPS” போன்ற உயரிய பதவிகளுக்கு, எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு போன்ற படிநிலைகளை தேர்வர்களுக்கு நடத்தி அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சிறந்த அதிகாரிகளை தேர்வு செய்கிறது. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை “IAS, IPS” போன்ற உயரிய பதவிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகளுக்காக “மிசோரம்” போன்ற மாநிலங்களில் உள்ள அகாடெமிக் அழைத்து தேவையான பயிற்சிகளை அளிக்கிறது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள, இந்திய மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இவர்கள் இதற்காக பல வருடங்கள் பயிற்சி மேற்கொண்டு இரவு பகலாக ஆர்வத்துடன் படித்து இந்த தேர்வில் தேர்ச்சி பெற முற்படுகிறார்கள். இந்த தேர்வுக்காக பல பயிற்சி நிலையங்கள் இந்தியா முழுவதும் செயல்படுகின்றது. இந்த நிலையில் அதிகாரியாக உள்ள ஒருவரை பணியில் இருந்து நீக்க முடியுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு உண்டு.
உண்மை என்னவென்றால் இந்த அதிகாரிகளை நாட்டின் பிரதமரோ, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அவர்களோ அதிகாரிகளை பணியில் இருந்து முழுமையாக நீக்க முடியாது. பிரதமரோ, முதலமைச்சரோ இந்த அதிகாரிகளை சிறிது காலம் பணியிடை நீக்கம் அல்லது பணியிட மாற்றம் மட்டுமே செய்ய முடியும் மாறாக அதிகாரிகளை பணியில் இருந்து முழுமையாக நீக்க முடியாது.
அதிகாரிகளை பதிவில் இருந்து நீக்கும் அதிகாரம் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு மட்டுமே உள்ளது. “இந்திய அரசியலமைப்பு சட்டம் 311 (2) பிரிவு”, என்ன சொல்கிறது என்றால், ஒரு அதிகாரியை அவர் ஏதேனும் “குற்ற செயல்களில்” ஈடுபட்டது உறுதியானால், அவரை பதவியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யலாம் அல்லது பணியிலிருந்து நீக்கம் செய்யலாம் என்றும், அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு என்பதையும் நமக்கு தெரிவிக்கிறது