தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 12 அதிகாரிகள் மாற்றம்!

0
112

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பின்னர் அந்த கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதன் பின்னர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசியலில் அதன் பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு அதிகாரிகளை தொடர்ச்சியாக இடமாற்றம் செய்து வருகிறது. தற்சமயம் நாற்பதிற்கும் அதிகமான ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் புதிதாக 12 ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்ய தமிழக அரசு சார்பாக உத்தரவு தரப்பட்டிருக்கிறது. அதாவது தர்மபுரி, சேலம், போன்ற மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதாவது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணைச் செயலாளராக சந்திரசேகர் சகாயம் நியமனம் செய்யப்படுகிறார். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இணைச் செயலாளராக அமிர்த ஜோதி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். டாக்டர் ஜக்மோகன் சிங் டெல்லியில் இருக்கின்ற தமிழகத்திற்கு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளராக இருந்த மதுமதி ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

சஜன் சிங் ஆர் சவான் நியாய விலை கடை பொருட்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் தற்சமயம் மீன்வளத் துறையின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சேலம் மாவட்ட ஆட்சியர் தோட்டக்கலைத்துறை மற்றும் பயிர் வளர்ச்சி துறை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருக்கும் கார்த்திகா உயர்கல்வித் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார். பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முதன்மை செயலாளர் சந்திரகாந்த் பிகாம் தாலி தற்சமயம் புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தமிழக சிவில் சப்ளை துறை ஆணையராக இருந்த சுதாதேவி தமிழ்நாடு நீர்நிலை துறை வளர்ச்சி இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.