Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நியாய விலைக்கடைகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பணியாளர்கள் அதிர்ச்சி!!

நியாய விலைக்கடைகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பணியாளர்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பண்டிகை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக விடப்படும் விடுமுறையை தவிர்த்து இடையில் பணி நாளாக இருக்கும் திங்கள் கிழமையும் விடுமுறை அளித்து தமிழக அரசு  உத்தரவிட்டிருந்தது.

முதல் நாளான இன்று சூரிய பொங்கல், நாளை மாட்டு பொங்கல், நாளை மறுநாள் உழவர் திருநாள் என்பதால் வரிசையாக விடுமுறை நாட்கள் வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் தைப்பூசத் திருநாளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களை தொடர்ந்து வருகிற 18-ஆம் தேதி தைப்பூசத் திருநாள் என்பதால் அன்றும் அரசு விடுமுறை தினமாக உள்ளது. இடையில் 17ஆம் தேதி மட்டும் வேலை நாளாக இருப்பதால் பொதுமக்களின் வசதிக்காக அன்றைய தினம்  விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்மூலம் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்த நாளில் நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறையா என்ற கேள்வி எழுந்ததை தொடர்ந்து 17ஆம் தேதி நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை அறிவித்து நேற்று முன்தினம் இரவு உணவு வழங்கல் துறை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களில் இன்னும் ஒரு சிலருக்கு மட்டும் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காமல் இருப்பதால் அதை விரைந்து  வழங்க வேண்டும் என்பதற்காகவும், அதுமட்டுமின்றி மாதந்தோறும் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெற பலரும் ஆர்வம் காட்டுவர் என்பதால் இவற்றைக் கருத்தில் கொண்டு வருகிற 17ஆம் தேதி நியாய விலைக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று உணவு வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version