Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதம்!

தெலுங்கானா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்திலும் வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பலர் பலியாகியுள்ளனர். 

வாகனங்கள், மின்சார கம்பிகள், கூரை வீடுகள்  போன்றவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் வெள்ளப்பெருக்கால் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியாகினர். திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஹைதராபாத்தில் பெரும் சேதம், மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது மக்களின் இந்த அவல நிலையை கண்ட தமிழக முதலமைச்சர், அரசின் நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாயை தெலுங்கானா மாநிலத்திற்கு கொடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ஐதராபாத் உள்பட சில மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசும், தமிழ்நாட்டு மக்களும் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழகத்திலிருந்து நிவாரண  நிதியுதவியும், தேவையான அத்தியாவசிய பொருட்களும் தெலுங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

Exit mobile version