Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமண பதிவு சட்டதிருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்த தமிழக அரசு!

திருமணம் செய்த தம்பதியினர் தங்களின் திருமணத்தை அரசு பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது அனைவரும் அறிந்த சட்டமாகும். திருமணத்தை பதிவு செய்ய 90 நாள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அவ்வாறு   பதிய வில்லை என்றால் அந்த தம்பதியினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 

பொதுவாக எந்த ஊரில் திருமணம் செய்யப்படுகிறதோ அங்கு உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் சிலர் திருமணம் முடிந்த பின்பு தம்பதிகள் தங்கள் ஊருக்கு சென்று விடுகிறார்கள். பின்னர் தங்கள் திருமணத்தை பதிவு செய்யாமல் அலட்சியமாக விட்டு விடுகிறார்கள்.

இதனால் எங்கு திருமணம் நடக்கிறதோ  அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமன்றி  மணமகளின் சொந்த ஊரிலோ அல்லது மணமகனின் சொந்த ஊரிலோ தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்ற திருமண சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் தமிழக அரசு தாக்கல் செய்து உள்ளது.

மேலும் இந்த புதிய திருமண சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றிய பிறகு இந்த புதிய வழிமுறை அனைத்து மாவட்டங்களிலும் பின்பற்றப்படும். இந்த புதிய சட்டம் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் மிகவும் சுலபமானதாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version