மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மும்மொழிக் கொள்கை ஏற்க கூடியது அல்ல என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய கல்வி கொள்கை சார்பாக நியமிக்கப்பட்ட குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ள தகவலை கொண்டு இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் தமிழகத்திற்கு மும்மொழிக் கொள்கை ஏற்புடையது அல்ல என்றும், பட்டப் படிப்புக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது தமிழகத்திற்கு சாத்தியமல்ல என்றும் எழுதப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக் கழகத்துடன் இணைப்பில் இருப்பது அவசியமே என்றும் கல்லூரிகளே பட்டமளிப்பு மேற்கொள்வது தமிழகத்திற்கு வேண்டாம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மாநில அரசுக்கு கல்வித் துறையில் அதிக அளவிலான சுயாட்சி அளிக்கப்பட வேண்டும் என்பதும் எழுதப்பட்டுள்ளது. இதுபோன்ற ஐந்து முக்கிய அம்சங்களை அக்கடிதத்தில் தமிழக அரசு எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
UGC, தேசிய கல்வி கொள்கை பற்றி தமிழக அரசிற்கு பின்பற்ற சொல்லிக்கொடுத்த உத்தரவை, மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு பதில் கிடைத்த உடன், ஆலோசனை மேற்கொண்ட பின்னரே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.