இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களா? லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் அதிர்ச்சி!

0
139

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 99 ஆயிரத்து 335 ரூபாய் கைப்பற்றப்பட்ட இருக்கிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டிருக்கிறது திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது சட்டம்-ஒழுங்கை சரிப்படுத்துவது லஞ்சம் வாங்குவதை தடுப்பது என்று அரசு அதிகாரிகளை முடுக்கி விட்டிருக்கிறது தமிழக அரசு. தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 29 மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை நடத்தியது இது பண்டிகை காலம் என்ற காரணத்தால், அரசு அலுவலகங்களில் பரிசுத் தொகை மற்றும் பரிசு பொருட்கள் லஞ்சமாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஒவ்வொரு பண்டிகை தினங்களிலும் லஞ்ச வளர்ப்பு துறை அதிரடியாக அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றது, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசுத்தொகை மற்றும் பரிசு பொருட்கள் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகம் ,ஆர்டிஓ அலுவலகம், டாஸ்மார்க், ஆர்டிஓ அலுவலகம் , செக்போஸ்ட், என்று முப்பத்தி எட்டு பகுதிகளில் இருக்கின்ற அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் என்று சோதனை செய்தார்கள் சென்னை மயிலாப்பூரில் அண்ணாநகர் வில்லிவாக்கம் திருவான்மையூர் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய அதிரடி சோதனையில் மயிலாப்பூர் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத 31 ஆயிரத்து 275 ரூபாய் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

அண்ணாநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று சொல்லப்படுகிறது, வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகங்களில் 11 ஆயிரத்து 790 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாய் கல்விக் கட்டணம் உயர்த்தப்படுகிறது டாஸ்மார்க் கடையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது செல்லப்படுகிறது ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக திருவண்ணாமலை டவுன் பிளானிங் அலுவலகத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும் , வேலூர் கூடுதல் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது ஒட்டுமொத்தமாக முப்பத்தி எட்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் 26 கோடியே 99 லட்சத்து 35 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்கள்.