மாணவிகளுக்கு அந்தமாறி தொல்லை கொடுத்த அரசு பள்ளி தமிழ் ஐயா! உதவி செய்த தலைமை ஆசிரியை! பெற்றோர் செய்த தரமான செயல்!
பள்ளிகளில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளிடமும், மாணவிகளிடமும் தகாத முறையில் அதாவது பாலியல் அத்துமீறல், சில்மிசங்களில் தகாத நடத்தையில் ஈடுபடும் ஆசிரியர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது அனைவருக்குமே மிகுந்த வருதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக சில மாணவிகள் விபரீத முடிவுகளையும் எடுத்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஆசிரியரை தாய், தந்தையரை போல் பார்த்த காலம் மாறி தற்போது யாரை எப்படி பார்ப்பது, எப்படி நம்புவது என்பதே தெரியாமல் இந்த மாதிரியான பல தவறுகளும் பல இடங்களில் அரங்கேறி வருகின்றன.
முதன் முதலில் சென்னையில் உள்ள பிரபல நடிகரின் பி.எஸ்.பி.பி பள்ளியில் ஆரம்பித்த இந்த புகார் பல்வேறு தனியார் பள்ளிகளை தொடர்ந்து தற்போது இந்த அவலம் பல அரசு பள்ளிகளிலும் நடந்தேறி வருகிறது. தற்போது அரியலூர் அருகே உள்ள காட்டுபிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றுபவர் அருள் செல்வன்.
இவருக்கு வயது 35. அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியிடம் அருள்செல்வன் பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் மேலும் சில மாணவிகளிடமும் அந்த ஆசிரியர் தொந்தரவு கொடுத்ததாக தெரியவந்துள்ளது. மேலும் சில பயிற்சி ஆசிரியைகளுக்கும் கூட அவர் இவ்வாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஆசிரியரின் இந்த தவறான நடத்தை குறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகமோ ஆசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பள்ளியை இன்று பெற்றோர்கள் சேர்ந்து முற்றுகையிட்டு மறியல் போராட்டம் செய்தனர்.
இந்த தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த அரியலூர் காவல்துறையினர் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், தமிழாசிரியர் அருள் செல்வனை காவல் நிலையம் அழைத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதோடு அந்த பள்ளியில் யார், யாரிடமெல்லாம் இது மாதிரியான தொந்தரவை அவர் மேற்கொண்டார் என்ற விசாரணையும் ஒருபுறம் மேற்கொள்ளப்படுகிறது.
தமில்செல்வன் மீதான விசாரணையை துரிதமாக நடத்தவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலும், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் அடிப்படையிலும் தமிழ் ஆசிரியரை தற்போது போக்சோ சட்டத்தின் மூலம் கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த ஆசிரியர் மீது புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த குற்றத்திற்காக தலைமை ஆசிரியையும் அரியலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும் அவர் மாணவ, மாணவிகளையும், பெற்றோரையும் எச்சரித்ததாக தகவல்கள் தற்போது கூறப்படுகின்றன.
எனவே இந்த குற்றத்திற்கு துணை போனதாக தலைமையாசிரியர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் தற்போது அனைத்து பெற்றோர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.