Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருத்துவ படிப்பிற்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா அமல் !! சட்டப்பேரவையில் ஒருமனதாக முடிவு

இந்தியாவில் நீட் தேர்வு தொடங்கிய பின்பு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

நீட் தேர்வு தொடங்கப்பட்டதிலிருந்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் குறைவாக இருப்பதினை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ,நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ,மருத்துவப் படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கான அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ,கடந்த மார்ச் 21- தேதி குழு அமைக்கப்பட்டது.அந்தக் குழுவில் உயர் கல்வி பள்ளிக்கல்வித்துறை, சுகாதார துறை, மருத்துவ கல்வி இயக்குனர், மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் ஆகியோர் அந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சட்டப்பேரவையில் அந்த குழு அளித்த அறிக்கையின்படி ,அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், 7.5% மட்டுமே உள் ஒதுக்கீடு வழங்கும் என்ன அவசர சட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், மருத்துவ படிப்பில் அரசு மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தாக்கல் செய்தார்.இதன்மூலம் மருத்துவம், இந்திய மருத்துவம், பல் மருத்துவம், மற்றும் ஹோமியோபதி ஆகிய இளங்கலை மருத்துவ படிப்புகளில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நடப்பு கல்வியாண்டு முதல், இந்த சட்டமானது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சமூகப் பின்னணியில் வேறுபாடு இருப்பதனால் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்குக் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் புதியதாக 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதால், அதன் மூலம் 1250 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றும் உள்ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் சமூக நீதி பெறுவதற்கு ,இது பெரும் வலிமை பெரிதாக வழி வகுக்கும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரும் கல்வியாண்டில் 7.5 சதவீதமாக உள்ள மாணவர் சேர்க்கை 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும்,அந்த மசோதாவில் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.

Exit mobile version