Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாட்டுக்கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை அரசு மானியம்..!! தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!

அரசு மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை அமைக்க தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும், கால்நடை பண்ணை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், தீவன பயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* நாட்டுக்கோழி பண்ணையுடன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

* செம்மறி ஆடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்

* பன்றி வளர்ப்பு பண்ணைக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வ்ரை மானியம்.

* அதேபோல் வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு, தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் https://nlm.udyamimitra.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களையும் https://www.tnlda.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version