சென்னை: தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய டாஸ்மாக்கில் தற்போது டிஜிட்டல் மாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கள்ளத்தனமாக விற்பனை செய்ய தடுக்கவும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிப்பதையும் தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் இந்த மாதத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வருடத்தில் எட்டு நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்படும் அதற்கு காரணம் முக்கிய தலைவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய தினங்களில் விடுமுறை அளிக்கப்படும். அதேபோல் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை ஒட்டி அன்று டாஸ்மாக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதனை அடுத்து ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் அன்று கொண்டாடப்படும் நிலையில் உள்ளதால் அன்றும் டாஸ்மாக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏறத்தாழ நான்கு ஆயிரம் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் மூலம் தினம் 120 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. பண்டிகை நாட்களில் ஒரு நாளில் 200 கோடி முதல் 400 கோடி வரை மது விற்பனை செய்யப்படுகிறது.