மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாத அரசாங்கம்! மனிதாபமின்றி வழங்கிய தீர்ப்பு!

0
151

மக்களின் உயிர்களின் மீது அக்கறை இல்லாத அரசாங்கம்! மனிதாபமின்றி வழங்கிய தீர்ப்பு!

கொரோனா தொற்றானது சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கி படிப்படியாக உலக நாடுகள் அனைத்திற்கும் சென்றது.பல லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனால் கொரோனா தொற்றானது சிறிதளவு குறைந்து காணப்பட்டது.

ஓராண்டு காலமாக நீடித்த இந்த ஊரடங்கு கடந்த ஜூலை மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.மக்கள் முதலில் விதிமுறைகளை கடைபிடித்தனர்.நாளடைவில் கொரோனா ஒன்று இருப்பதை  மறந்து மக்கள் சகஜமாக நடமாட ஆரம்பித்துவிட்டனர்.மீண்டும் கொரோனாவனது அதிக அளவு பரவ ஆரம்பித்துவிட்டது.பெருமளவு கொரோனா தொற்றானது மகாராஷ்டிரா,தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.

அதிலும் முக்கியமாக மகாராஷ்டிராவில் அதிக அளவு கொரோனா தொற்று உள்ளதால் அங்கு தற்போது ஊரடங்கு பிரபிக்கப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதல் 6  ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் நடக்க தடை விதிக்க வேண்டுமென்று மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் மனுநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் அவர் கூறியது,கொரோனா தொற்றானது மக்களை ஓராண்டு காலமாக பெருமளவு பாதித்திருந்தது.சிறிது குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்குகிறது.

இந்நிலையில் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் அப்போது அதிக அளவு     மக்களுக்கு கொரோனா தொற்றானது பரவும்.மேலும் அதிக அளவு உயிர்களை இழக்க நேரிடும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தும் அதை மக்களுக்குக் செலுத்தி வந்தாலும் இந்த கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியவில்லை.ஆகையால் அரசியல்வாதிகள் பொதுக்கூட்டம் கூடி பிரச்சாரம் மேற்கொள்வதை தடை செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும்,தமிழக அரசிற்கும் உத்தரவு விட வேண்டும் எனக் அந்த மனுவில் கேட்டுக்கொண்டார்.மேலும் அவர்கள் பிரச்சாரத்தை வலைத்தளங்கள் மூலம் மேற்கொள்ளலாம் எனவும் அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்திகுமார் ராமமூர்த்தி கூறியது,சமீபகாலமாக கொரோனா தொற்று பரவுவது அதிக அளவாக இருக்கலாம்.இருப்பினும் தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால் அதில் தலையிட முடியாது என சிறிதும் மக்களின் உயிர்களின் மேல் அக்கறை கொள்ளாமல் நீதி மன்றம் தீர்ப்பு கூறியது.

அதே சமயம் பிரச்சாரம் கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும்.அதே சமயம் சமூக இடைவெளி விட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும்.இந்த விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் அக்கட்சிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் எனக் கூறி தீர்ப்பு வழங்கினார்.இவர்கள் கூறிய தீர்ப்பு யாருக்கும் திருப்த்தி அளிக்கவில்லை.அதுமட்டுமின்றி பிரச்சாரத்தில் கலந்துக்கொள்ளும் யாரும் சரியான விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை.இந்த தீர்ப்பானது மனித உயிர்கள் மேல் அக்கறை இல்லாமல் இருப்பது போல இருந்தது.