Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை! நீதிமன்றத்தின் உத்தரவு!

government-work-through-fake-documents-court-order

government-work-through-fake-documents-court-order

போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை! நீதிமன்றத்தின் உத்தரவு!

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தலைவாசல் பகுதியில் காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடாசலம்.அதே கோவிலில் அலுவலக உதவியாளராக பணி புரிபவர் வெங்கடேஷ்.இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் அப்போது இந்த பணிக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்ற நிலை இருந்தது அதனால் இவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு படித்ததாக கூறி போலி சான்றிதழை கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளனர் என புகார் எழுந்தது.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.மேலும் இந்த வழக்கானது கோவை நீதி மன்றத்தில் நடந்து வந்தது.அதனையடுத்து இவர்கள் போலி சான்று கொடுத்துதான் அரசு வேலையில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

அதனால் நீதிபதி இவர்கள் இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையையும் ரூ ஐந்தாயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.சில மாதங்களாக போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடி மற்றும் அரசு வேலை வாங்குவது போன்ற சம்பவங்கள் அரேங்கேறி வருகின்றது.

Exit mobile version