Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! தீபாவளியை முன்னிட்டு இலவச கேஸ் சிலிண்டர்!!

governments-sweet-news-on-the-occasion-of-diwali-free-cylinders-for-public-as-diwali-gift-chief-ministers-order

governments-sweet-news-on-the-occasion-of-diwali-free-cylinders-for-public-as-diwali-gift-chief-ministers-order

முதல்வர் அவர்கள் அமைச்சரவை கூட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் தீபாவளி பண்டிகை முதல் அனைவருக்கும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி கிராமப்புற மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பினை வழங்கினார். அதற்கு முன்னதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழக மக்களுக்கு இலவச கேஸ் அடுப்பினை வழங்கினார். இதன் மூலம் கேஸ் சிலிண்டர்களின் தேவை அதிகரித்தது.

இந்நிலையில், கேஸ் சிலிண்டரின் விலை அதிகம் என்ற காரணத்தால் மத்திய அரசு மானிய விலையில் கேஸ் சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்த பொழுது மானிய தொகை நேரடியாக பொதுமக்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் மக்களே கவரும் விதமாக இலவச கேஸ் சிலிண்டர்கள் மற்றும் மானிய விலையில் கேஸ் சிலிண்டர்கள் என அறிமுகப்படுத்தப்பட்டன.

தேர்தல் பரப்புரையின் போது இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவு திறந்த நிலையில், அதனை தற்போது செயல்படுத்தும் கட்டத்தில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அமைச்சரவை கூட்டம் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் நடைபெற்றது. இதில் தேர்தலின் போது முதல்வர் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் அனைவராலும் இலவச கேஸ் சிலிண்டருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

Exit mobile version