ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

0
237
#image_title

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு சமீபத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜராகி முறையீடு செய்தார்.

முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனுத்தாக்கல் செய்து, மனு முறையாக இருந்தால் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும், இல்லாவிட்டால் வழக்கமான பட்டியலில் இடம்பெறும் என்றும் தெரிவித்தனர்.