Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓ.பி.எஸ்ஸுக்கு சூப்பர் ஆஃபர் கொடுத்த பாஜக! ஆனால் ஒன்று!

கடந்த 23ம் தேதி நடைபெற்ற அதிமுக வின் பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் வழங்கிய இருபத்திமூன்று தீர்மானங்களும் அதிரடியாக பொதுக்குழு உறுப்பினர்கள் ரத்து செய்யப்பட்டது அதோடு கோபத்துடன் பொதுக் குழுவிலிருந்து வெளியேறிய ஓபிஎஸ் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள துணிந்தார்.

இதனையடுத்து உடனடியாக அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார், அங்கு சென்ற பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திரமோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருந்தார். முன்னதாக தேர்தல் ஆணையரை சந்தித்து அதிமுக விவகாரம் தொடர்பாக பேசி இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு இன்னமும் இசை வழங்கப்படவில்லை, ஆகவே குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் கூட்டணி சார்பாக போட்டியிடும் திரௌபதி முர்மு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடியுடன் ஓபிஎஸ் பங்கேற்று கொண்டார் அதன் பிறகு பிரதமரை சந்திப்பதற்கு அவர் முயற்சி செய்தார். ஆனால் தீவிரமாக முயற்சி செய்தும் பிரதமர் நரேந்திர மோடியின் தரப்பு பன்னீர் செல்வத்திற்கு நேரம் ஒதுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் சிலரை மட்டும் பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது, டெல்லியில் ஒரு முக்கிய பாஜக தலைவரையும் அவர் சந்தித்த காரணமும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் அதிமுக விவகாரத்தில் பெரிதாக நடுநிலை வகிக்க பாஜக முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஓரளவிற்கு சமாதானம் செய்ய முயற்சி செய்கிறோம் முடிந்த அளவு மட்டுமே சரி செய்ய முடியும் என்று மட்டுமே டெல்லி வட்டாரம் தெரிவித்திருக்கிறது என சொல்லப்படுகிறது.

ஆனால் பாஜக பன்னீர் செல்வத்திற்கு வேறு ஒரு ஆஃபரை வழங்கியிருக்கிறது என சொல்லப்படுகிறது. அதாவது தாங்கள் அரசியலில் மிகுந்த அனுபவம் மிக்கவர் தாங்கள் ஏன் ஆளுநர் என்ற பதவிக்கு வரக்கூடாது? என கேட்டிருக்கிறார்கள் மற்ற மாநிலங்களில் ஆர்வலராக உயர்பதவியில் இருக்கலாம் என்றும் பன்னீர்செல்வத்திடம் சொல்லப்பட்டிருக்கிறது.

மிக விரைவில் ஆளுநர்களை நாடு முழுவதும் பல மாநிலங்களில் கூட மாற்றம் ஏற்படும் தெலுங்கானாவில் கூட ஆளுநரை மாற்ற வாய்ப்புகள் இருக்கிறது. நீங்கள் ஏன் ஆளுனராக கூடாது? என்று டெல்லி வட்டாரம் அவரிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

அதோடு இன்னொருபுறம் உங்களுடைய மகன்கள், தேவர், சமூகத்தைச் சேர்ந்த உங்களுடைய ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் எங்கள் கட்சியில் இணைய வேண்டும், அவர்களுக்கான பதவி தொடர்பாக எந்தவிதமான கவலையும் தங்களுக்கு தேவையில்லை என்று டெல்லி தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் பன்னீர்செல்வம் தரப்பு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, என்று சொல்லப்படுகிறது ஆளுநர் பதவி என்பது வெறும் திட்டம் என்பதை போலவே வழங்கியிருக்கிறார்கள். அதனால் அதனை பன்னீர்செல்வம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு தற்போதைக்கு தீவிர அரசியலிலிருந்து விலகும் எண்ணமில்லை. அதிமுகவில் இன்னும் தனக்கு ஆதரவு இருக்கிறது என்று பாஜக தரப்பில் பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறாராம். இன்று சென்னை வரும் பன்னீர்செல்வம் முக்கிய சில ஆலோசனைகளை மேற்கொள்ளவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Exit mobile version