Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுகவை பழிதீர்க்க தயாரான ஆளுநர்! ஆதாரத்துடன் டெல்லி விசிட்

R. N. Ravi

R. N. Ravi

திமுகவை பழிதீர்க்க தயாரான ஆளுநர்! ஆதாரத்துடன் டெல்லி விசிட்

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்று பிறகு ஜாமீனில் வெளியாகி உள்ளார். இந்நிலையில், இவர் திமுக அரசின் மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்த துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார்.

அதேபோல கடந்த ஜனவரி 31 ஆம் தேதி அன்று சவுக்கு சங்கர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீதான புகார் மனுவை வழங்கினார். இதனால் இந்த புகார் விவகாரம் பெரிதும் பேசப்பட தொடங்கியது. இந்நிலையில், சவுக்கு சங்கர் கொடுத்த புகார் குறித்து ஆளுநர் ரவி பரிசீலினை செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்ற ஆளுநர் ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழத்தின் சட்ட ஒழுங்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி ஆகியோர் மீது சவுக்கு சங்கர் கொடுத்த புகாரை அமித் ஷாவிடம் வழங்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே திமுக அரசுடன் ஆளுநருக்கு மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் சவுக்கு சங்கர் கொடுத்துள்ள அறிக்கைகள் ஆர்.என். ரவிக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் இந்த அறிக்கைகள் எந்த அளவுக்கு திமுக அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என தெரியவில்லை.

Exit mobile version