சிறந்த நிறுவனங்கள் பட்டியலில்  இடம்பெற்ற  தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!…

0
190
Governor RN Ravi praises Tamil Nadu educational institutes in the list of best institutes!...

சிறந்த நிறுவனங்கள் பட்டியலில்  இடம்பெற்ற  தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!…

தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி சிறப்பு கருத்தரங்கம் சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கியவர்கள் ஆவார்கள்.

மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மத்திய அரசு தற்போது வெளியிட்ட சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற தமிழக உயர்கல்வி நிறுவனங்களை பாராட்டியுள்ளார்கள்.இந்நிறுவனங்களின் இயக்குனர்கள், துணைவேந்தர்கள், பிரதிநிதிகளை அழைத்து கவர்னர் ஆர்.என்.ரவி பொன்னாடை போர்த்தி பாராட்டி பெருமைப்படுத்தினார்கள்.

அதன்படி இந்தியாவிலேயே முதல் பத்து இடங்களில் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றது சாதனை படைத்தது .மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 20 இடங்களுக்குள் தமிழக கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த கல்வி நிறுவனங்களுக்கு என்னுடைய  மனமார்ந்த வாழ்த்துகள். இந்நிலையில் உயர்கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கை சதவீதத்தில் தமிழகம்தான் அதிகளவில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல் பட தமிழக அரசு முன்வரவேண்டும்.எண்ணிக்கையில் மட்டும் முன்னிலையில் இருந்த  போதுமா? உயர்கல்வியின் தரத்திலும் தமிழகம்தான் முதலிடம் வகித்து வர வேண்டும்.

அதை இன்னும் தரத்தில்  உயர்த்தவேண்டும் என்ற முயற்சியில்தான் இந்த பாராட்டு நிகழ்ச்சி நடக்கிறது என்றார்.மேலும் நம் முன்னேற்றத்திற்கு இன்னும் கடுமையாக பாடுபட வேண்டுமென்று தன் உரையை முடித்துக்கொண்டார் .