நம் நாட்டிலேயே கரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு அதை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி சாதனைப்படுத்தி வந்துள்ளது என்று தமிழிசை அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து,புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
மக்கள் தொகை அதிகம் கொண்டுள்ள நம் நாட்டில் கரோனா தடுப்பூசிகளை செலுத்தி விட முடியுமா? என்று கேட்டு கொண்டிருந்த மற்ற நாடுகளுக்கு முன் இன்று 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது நம் தாய் நாடு .
இந்தியாவில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டிபெரும் சாதனையை படைத்துள்ளது.
இந்த பெரும் சாதனையை படைக்க நம் இந்தியாவை சரியான முறையில் வழி நடத்திச் செல்லுகின்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் நாட்டிலேயே கரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு அதை மற்ற 100 நாடுகளுக்கும் கொடுத்து உதவி செய்து சாதனை படைத்த நாடு நம் இந்தியா.
இந்த மாபெரும் சாதனைகளை படைக்க கரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த மருத்துவ வல்லுனர்களுக்கும், செயலாற்றிய மருத்துவர் அவர்களுக்கும், செவிலியர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் என அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.