மக்களே இனி சிக்கனமாக பயன்படுத்துங்கள்:! தங்கம் விலைக்கு உயரும் வெங்காயத்தின் விலை!
கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகின்றது.இந்நிலையில் அனைத்து வகை வெங்காயம் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு அவசரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாகவும், கொரோனா தொற்றின் காரணமாகவும் வெங்காய உற்பத்தி குறைந்து இருப்பதே மத்திய அரசின் இந்த தடைக்கு காரணமாக கூறப்படுகின்றது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெங்காயத்தின் விலை கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றது.மத்திய அரசு போட்டுள்ள இந்த தடையால் வெங்காயத்தின் விலை வரும் நாட்களில் கடுமையாக உயரலாம் என்று கூறப்படுகிறது.இதுமட்டுமின்றி குளிர்காலத்தில் கையிருப்பு வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் மறு உத்தரவு வரும்வரை வெங்காயத்தை ஏற்றுமதி செய்யக் கூடாது என்றும் அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அவசர தடை விதித்துள்ளது.குறிப்பாக வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் கிருஷ்ணாபுரம் வெங்காயம், மற்றும் பெங்களூரு ரோஸ் வெங்காயம் ஆகிய இரண்டு வெங்காய ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
எப்பொழுது வேண்டுமானாலும் வெங்காயத்தின் விலை திடீர் உச்சத்தை எட்டலாம் என்று கூறப்படுகிறது. அதனால் மக்கள் வெங்காயத்தை சிக்கனத்துடன் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.