இந்த திட்டத்தில் 50000 செலுத்தினால் போதும்.. 13 லட்சம் வரை வழங்கும் SBI வங்கி!!

0
102
Govt created (PPF) scheme.. Paying 50 000 only.. SBI bank offering 7.1% interest!!

சமீப காலங்களில் மக்கள் பலர் தங்கள் குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக இரவும்,பகலும் உழைத்து கொண்டிருக்கின்றனர். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், தங்களின் தற்போதைய செலவுகளால் பணத்தை சேர்த்து வைக்க முடிவதில்லை என்பதே சோகத்திற்குரிய விஷயமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் அரசாங்கத்தால் SBI (PPF) திட்டம் உருவாக்கப்பட்டது.
பொது சேமநல நிதியம்: (Public provident Fund) இது இந்தியாவின் “சேமிப்பு மற்றும் வரி சேமிப்பு” திட்டமாகும். “1968 ல்” இந்திய நிதி அமைச்சகத்தின், தேசிய சேமிப்பு அமைப்பால், சிறிய சேமிப்புகளை திரட்ட உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். வருமான வரி நன்மைகள் மூலம், ஒழுக்கமான வருமானம் கொண்ட முதலீட்டு வருவாயை தருவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

SBI (PPF) திட்டம்: இந்த திட்டத்தில் நீங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் “500 முதல் அதிகபட்சம் 1,50,000 வரை” முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம் நீங்கள் செலுத்தும் வருடாந்திர தொகைக்கு “7.1%. வட்டியை உங்களுக்கு வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் “கால அளவு 15 ஆண்டுகள்” ஆகும். நீங்கள் விரும்பும் பட்சத்தில் அதை மேலும் “5 ஆண்டுகள்” நீட்டித்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் நீங்கள் இணையும் பட்சத்தில், உங்களின் 15 வருட முதலீட்டின் காரணமாக, வங்கி உங்களுக்கு கடன் உதவியும் வழங்கும்.

முதலீட்டின் பயன்களை பார்ப்போம்:

SBI (PPF) திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 50,000 ரூபாய் நீங்கள் வங்கியில் செலுத்தி வந்தீர்கள் என்றால். 15 ஆண்டுகளில் உங்கள் முதலீடு மற்றும் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு 13,56,000ம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால் அதில் நீங்கள் 15 வருடத்தில் செலுத்திய தொகை 7,50,000 மட்டுமே.
15 வருடத்திற்கு நீங்கள் செலுத்திய தொகைக்கு வங்கி அளிக்கும் 7.1% வட்டியுடன் உங்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். இதில் உங்களுக்கு வட்டியாக மட்டும் 6,06,000 ரூபாய் கிடைக்கப் பெறுவீர்கள்.
ஆண்டுக்கு அதிகபட்சமான 1,50,000 நீங்கள் செலுத்தி வந்தால் 15 ஆண்டுகளில் 40,50,000 க்கும் மேல் பெறுவீர்கள்.

இந்த திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்பட்டு காலத்திற்கேற்ப திருத்தியமைக்க பெறும்.