மாணவர்கள் குறைந்த சதவீத தேர்ச்சி மதிப்பெண் ஆன 35 மதிப்பெண் எடுக்க கஷ்டப்படும் நிலையில், அதனை 20 மதிப்பெண் ஆக மகாராஷ்டிரா அரசு குறைத்துள்ளது.
மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால் கல்வியை முழுமையாக கைவிட்டு விடுகின்றனர். இதனை மாற்றும் விதமாக இந்த அறிவிப்பினை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ளது.
இம்முறையில் தேர்ச்சி பெறுபவர்கள் அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புகளை படிக்க முடியாது எனவும், கலை சார்ந்த பட்டப்படிப்புகளை மட்டுமே படிக்க முடியும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநில உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியத்தின் தலைவர் சரத் கோசவி அவர்கள் இந்த முறை உடனடியாக செயல்பாட்டுக்கு வராது என்றும், புதிய பாடத்திட்டத்தினை அறிமுகப்படுத்தும் பொழுது தான் இதனையும் செயல்படுத்த முடியும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் இதனைக் குறித்து கல்வித்துறையிலும் கலந்து ஆலோசித்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
மகாராஷ்டிரா அரசு மாணவர்களுக்கு நல்வழி காட்டும் வகையில் 35 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைய கஷ்டப்படும் மாணவர்களுக்கு 20 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது என்று கூறியுள்ளது.