அடி தூள்.. அரசு ஊழியர்கள் இனி முன் பணம் பெற இதில் விண்ணப்பிக்கலாம்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

0
148
Govt employees can now apply for advance payment!

Tamilnadu Gov: தமிழக ரசானது அரசு ஊழியர்களின் நலன் கருதி அவர்களின் பயன்பாட்டிற்காக களஞ்சியம் செயலியை அறிமுகம் படுத்தியுள்ளது.

தமிழக அரசின் கீழ் ஒவ்வொரு துறை சார்ந்தும் பல்வேறு தரப்பு அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் நலன் கருதி பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து துறைகள் சார்ந்த ஓய்வூதியம் வருங்கால வைப்பு நிதி என அனைத்தையும் ஒருமனே சரி பார்க்கும் வகையில் களஞ்சியம் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என கூறியுள்ளனர். முன்பெல்லாம் ஒவ்வொரு துறை சார்ந்த அரசு ஊழியர்களும் தங்களின் அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை சந்தித்து ஓய்வூதியம் மற்றும் வைப்பு நிதியிலிருந்து முன்பணம் எனத் தொடங்கி தற்கால விடுப்பு வரை அனைத்தையும் வாங்க வேண்டி இருந்தது.

தற்போது இதனை மாற்றியமைத்து யார் வேண்டுமானாலும் இனி வரும் காலங்களில் அலுவலர்கள் உதவி இல்லாமல் களஞ்சியம் செயலி மூலம் அனைத்தையும் பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தி உள்ளனர். மேற்கொண்டு இந்த செயலியில் வருங்கால வைப்பு நிதி மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவைகளில் ஏதேனும் சந்தேகம் இருக்கு அதனையும் அறிந்து கொள்ளலாம்.

வைப்பு நிதியிலிருந்து பண்டிகை காலங்களில் முன்பணம் பெற வேண்டி இதில் விண்ணப்பிக்கவும் முடியும். இந்த களஞ்சியம் செயலியானது தனியார் நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் நடைமுறையை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேற்கொண்டு இதில் பே சிலிப் எனத் தொடங்கி அனைத்தையும் பெற்றுக் கொள்ளும் வசதியை செய்துள்ளனர்.