LTC திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் வந்தே பாரத் ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடுமுறை பயணச் சலுகை திட்டம் :-
மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது LTC எனப்படும் விடுமுறை பயணச் சலுகை திட்டம் என்ற இலவச வந்தே பாரத் ரயில் பயணம் என்ற திட்டத்தையும் கொடுத்திருப்பது ஊழியர்களை ஊக்குவிப்பதாய் அமைந்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் வெளியிட்டுள்ளனர்.
DoPT அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மத்திய அரசு ஊழியர்கள் இதுவரை ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களில் கட்டணமின்றி பயணம் செய்து வந்த நிலையில் தற்பொழுது தேஜாஸ் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LTC என்பது மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய சுற்றுலா விடுமுறைகளுக்கு அரசே ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குவதுடன் LTC திட்டத்தின் விதிகளின்படி சுற்றுலா செல்ல மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.