அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறைப்பு!! பத்திரம் மூலம் பணம்?.,ஊழியர்கள் அப்செட்!!

0
179

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக மீண்டும் குறைக்கலாம் என்பது பற்றி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை இரண்டு வருடம் அதிகரித்தார். மேலும், அவர் 60 ஆக உயர்த்திய காரணத்தால் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட ஓய்வு பெறும் போது செய்ய வேண்டிய பல செட்டில்மெண்ட்கள் தாமதம் ஆகும் என்பது எடப்பாடி பழனிச்சாமி அரசின் திட்டம். தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடி சூழ்ந்த காரணத்தினால் தான் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக எடப்பாடி ஆட்சியில் உயர்த்தப்பட்டது.

மேலும் அதற்கான அரசாணையும் தெரிவித்திருந்தன. இதன் காரணமாக புதிய வேலைவாய்ப்புகள் அரசுத்துறையில் உருவாகவில்லை. இளைஞர்களை வேலைக்கு எடுக்கும் புதிய நியமனங்களும் இல்லை. மேலும் இந்த நிலையில் தற்போது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின், 60 ஆக உயத்தப்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக மாற்றலாம் என்று யோசிப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன.

அதனை தொடர்ந்து 60 வயதாக உயர்த்தப்பட்டதால் கடந்த ஆண்டு ஓய்வு பெறவேண்டிய ஊழியர்கள் 9 மாதங்களாக பணிகளை தொடர்கிறார்கள். மேலும் மூன்று மாதங்கள் பணிபுரிய அனுமதித்துவிட்டு அவர்களை ஓய்வு பெற வைக்கலாம் என்று ஒரு ஆலோசனை நடந்து உள்ளது. ஓய்வு பெறும் போது அவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை கொடுக்க வேண்டும்.

அதற்கு மிகப்பெரிய அளவிலான தொகையை அரசுக்கு தேவை என்றும் தற்போதைய நிலை அதற்கு சாத்தியமில்லை என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இது ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அப்போது ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் இருந்து இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு பணமாக மாற்றிக் கொள்ளும் வகையில் பாண்ட் கொடுத்துவிட்டால் சமாளிக்கலாம் என்று விவாதம் நடந்து உள்ளது.

மேலும் பாண்ட் கொடுத்தால் அரசு ஊழியர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சர்ச்சையை ஏற்படுத்தும் யாரும் ஏற்க மாட்டார்கள் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். எடப்பாடி அரசு போட்ட அரசாணையை ரத்து செய்ய என்ன வழிகள் உள்ளன? அதற்கு தோதான நிதியை எந்த வழிகளில் உண்டாக்கலாம்? என்று ஆலொசனை முடியவில்லை. அதனை அறிந்து அரசு ஊழியர்கள் மிக மிக வருத்தத்தில் இருக்கின்றனர்.