தீபாவளி அன்று மது பிரியர்களுக்கு செக் வைத்த அரசு!!

0
168
Govt gave check to liquor lovers on Diwali!!

தமிழகத்தில் பல்வேறு நிதி தொடர்பான திட்டங்கள் செயல்பட காரணம் டாஸ்மாக். ஏனெனில் டாஸ்மாக் மூலம் தான்  அரசுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு பல நூறு கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. அப்படி என்றால் நம் நாட்டில் எவ்வளவு மதுபிரியர்கள் இருப்பார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த டாஸ்மாக் மூலம் சராசரியாக 120 கோடியும்  மாதத்திற்கு 3,698 கோடி ரூபாய் அளவுக்கு  மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைக்கு 3நாட்கள் தொடர் விடுமுறை என  அறிவித்துள்ளது. இந்த செய்தி குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து அக்டோபர் 28, 29, 30 என மூன்று நாட்களுக்கு விடுமுறை என தகவல் வெளியாகி உள்ளது.

இது தமிழக அரசுக்கு மட்டும் இல்லாமல் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மதுபான கடைகள் முக்கியமான சில நாட்களில் விடுமுறை அளிக்கப்படும். ஜனவரி 15, ஜனவரி 26, மே 1, வள்ளலார் தினம், சுதந்திர தினம், அக்டோபர் 2, மே 1 தொழிலாளர் தினம் என மிக முக்கியமான நாட்களில் விடுமுறை அளிக்கப்படும்.

அதை மீறி வேறு எந்த நட்சத்திர ஓட்டலில் மதுபான கடைகள் செயல்பட்டால் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யபடுவது, நிறுத்தி வைப்பது,மற்றும் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த விடுமுறை காரணமாக மதுபிரியர்கள் என்ன செய்ய போகிறோம் என தள்ளாடுகிறார்கள்.