நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு தரும் மானியம்!! விண்ணப்பிப்பது எப்படி இதோ முழு விவரம்!!
50% மானியத்தில் 250 நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது பற்றி மாவட்ட ஆட்சி தலைவர் கூறிய செய்தியில், திறமை வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க உதவும் திட்டம் 2023 – 24 ஆம் நிதியாண்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்டம் ஒன்றுக்கு 3 லிருந்து 6 பயனாளிகள் தேர்வு செய்து திட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் பயனாளிகள் அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும் மற்றும் பண்ணை அமைப்பதற்கு சுமார் 625 சதுர அடி நிலம் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.
மேலும் அந்த நிலம் மனித குடியிருப்புகளுக்கு அருகில் இல்லாததாகவும் இருத்தல் வேண்டும்.
நாட்டுக்கோழி பண்ணை அமைப்பதற்கு தமிழக அரசிடமிருந்து 50 %மானியம் அனைவருக்கும் அளிக்கப்படும்.
நான்கு வார வயதுடைய கோழிக்குஞ்சுகள் 250 என்ற எண்ணிக்கையில் ஒவ்வொரு பயனாளிக்கும் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.
இதில் திருநங்கைகள், ஆதரவற்றோர்கள், விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
30% பழங்குடியினராகவும் பட்டியல் வகுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
மேலும் மூன்று ஆண்டு காலம் கோழிப் பண்ணையை பராமரித்தவராக இருக்க வேண்டும் என்றும், 2022 -23 ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் கட்டாயமாக பயனடைந்திருக்கக் கூடாது என்றும் கூறப்படுகிறது.
இத்திட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் ஜூன் 30 வரை அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி