Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசின் ஹேப்பி நியூஸ்!! இந்த நாள் பள்ளிக்கு விடுமுறை!! 

#image_title

பள்ளி மாணவர்களுக்கு அரசின் ஹேப்பி!! நியூஸ் இந்த நாள் பள்ளிக்கு விடுமுறை!! 

வருகின்ற 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த நாள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் வேலை நிமித்தமாக பணிபுரிவோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை அன்று வருவதால் பண்டிகையை கொண்டாடிவிட்டு அடுத்த நாளே திங்கட்கிழமை பள்ளி,   கல்லூரிகளுக்கு, மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமத்தை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான 13-ஆம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

அதனைத் தொடர்ந்து அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திங்கட்கிழமை மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு விடுமுறை அளிப்பதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நவம்பர் 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் செயல்படும்.

 

Exit mobile version