Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாடு முழுவதும் அதிகரிக்கும் மின் கட்டணம்! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

Govt instructs power supply companies to raise electricity tariffs to compensate

Govt instructs power supply companies to raise electricity tariffs to compensate

நாடு முழுவதும் அதிகரிக்கும் மின் கட்டணம்! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

தற்பொழுது நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம் மின் துறை அமைச்சகம் ஓர் வரையறுக்கப்பட்ட விளக்க குறிப்பை கொடுத்துள்ளது. அதில் பல மாநிலங்களில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்கள் சரியான கட்டண விவரங்களை சமர்ப்பிக்காமல் தாமதமான செலுத்தப்படும் கட்டண விவரங்களை மட்டும் சமர்ப்பிப்பதாக குறை கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இன்னும் பல மாநிலங்களில் உள்ள பகிர்மான நிறுவனங்கள் செலவுகளை காட்டாத வகையில் கட்டண விவரங்களை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 36 மாநிலங்கள் அதனுடன் யூனியன் பிரதேசங்களில் 17 மாநிலங்கள் மட்டுமே கடந்த 2 ஆண்டு காண வரையறுக்கப்பட்ட கட்டண விவரங்களுடன் கூடிய தகவல்களை அளித்திருப்பதாக ஆலோசனை குழுவிற்கு மின்சார துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. குறைந்த விலையிலேயே மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என்று மின்சார விநியோக நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் உத்தரவை அமல்படுத்துவது. அதாவது இருந்தபோதிலும் வசூலிக்கப்பட்ட மானியங்களை குறித்த நேரத்தில் தற்போது வரை செலுத்தவில்லை என கூறியுள்ளனர்.

யாரு சரியான நேரத்தில் கட்டணத்தை செலுத்தாததால் மாநில அரசுகளின் கடன் பாக்கி 59,489 கோடியாக தற்போது அதிகரித்துள்ளது. இந்த தாமதமாக கட்டணம் செலுத்துவதில் முக்கிய பங்காக தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மராட்டியம் மற்றும் கர்நாடகாவிற்கு பெரும் பங்கு உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர். இந்த மாநிலங்கள் தகுந்த நேரத்தில் கட்டணங்களை செலுத்தாததால் இதனை ஈடு செய்ய மின் பகிர்மான கழகங்கள் அதிக கடன் வாங்கும் நிலையில் உள்ளனர். குறிப்பாக 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் ரூ 5.2 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அத்தோடு அந்த காலகட்டத்திலேயே மின் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் 4.9 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன்களை வாங்கி இருப்பதாக தற்போதைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. தற்போதைய உள்ள மின் வினியோக நிறுவனங்களில் மிகவும் அடித்தளமான முறையில் மானியங்கள் வசூல் செய்வதை மின் வினியோக நிறுவனத்தின் நிதிநிலை குறைய ஒரு பெரிய காரணம் என்று கூறுகின்றனர். இந்த நிதி நிலையை சீராக்க வசூல் முறை மற்றும் பில்லிங்கை மாற்றம் செய்வதால் நல்ல பலனை எதிர்பார்க்க முடியும்.

அதுமட்டுமின்றி வரும் காலங்களில் ஏற்படும் செலவினங்களை கட்டுப்படுத்த தற்போது உள்ள மின் விநியோக நிறுவனங்கள் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மத்திய மின் அமைச்சகம் கூறியுள்ளது. மத்திய அமைச்சகம் கூறிய நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் ஏற்க்குமாயின் கட்டாயம் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மின் கட்டணம் உயரும். இதனை மக்கள் எந்த வகையில் எதிர் கொள்வார் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.

Exit mobile version