Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் துறைக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்திய தமிழக அரசு.!!

குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் வகையில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார்.

ஒருவரின் முக அடையாளத்தைக் கொண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்கும் வகையில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

சந்தேகப்படும் நபரை காவல்துறையினர் புகைப்படம் எடுத்து அதனை இந்த அப்ளிகேஷனில் பதிவேற்றினால் அவர் குற்றம் செய்தவரா அல்லது தேடப்படும் குற்றவாளியா என்பது குறித்த தகவல்கள் இதன் மூலம் அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் மூலம் தமிழகம் முழுவதும் குற்றங்கள் செய்தவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக குற்றவாளிகளை எளிதாக கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.

Exit mobile version