Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலர் – திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலர் – திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று முன்தினம் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அதிமுக நிர்வாகிகளை சந்திக்க கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது நிர்வாகிகள் சந்தித்த பின்பு வட்டார வளர்ச்சி அலுவலர் அறைக்கு சென்று ஆணையாளர் அருள்பாரதியை சந்தித்த போது தனது இருக்கையை சட்டமன்ற உறுப்பினருக்கு விட்டுக் கொடுத்துவிட்டு எதிரே வந்து உட்கார்ந்தார்.

இந்த சம்பவமானது திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அங்கிருந்த திமுகவினர் அதிகாரிகள் தனது இருக்கையை எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் எப்பொழுதும் நடுநிலைமையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், இவர் அதிமுக கட்சியினருக்கு பாசமாக செயல்பட்டு வருகிறார் என்றும் திமுகவினர் கூறிவருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர் ஏதேனும் புகார் கொடுத்தாலும் நலத்திட்டங்களை அறிவித்தாலும் தனது இருக்கையை தரத் தேவையில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் தனது இருக்கையை ஏன் கொடுத்தார் என்றும் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

உடனடியாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். இந்த கூட்டத்தில் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜ் ஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version