Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட மோட்டு தடுப்பூசி செலுத்தும் பணி! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

நாட்டில் நோய்த்தொற்று நிலவரம் தொடர்பாக மத்திய, மாநில, அரசுகள் தனித்தனியே தங்களுடைய அறிக்கைகளை நாள்தோறும் வெளியிட்டு வருகின்றன.

அதனடிப்படையில், மாநில அரசின் சார்பாக மாநில சுகாதாரத்துறை நாள்தோறும் மாநிலத்தில் நோய்தொற்று பாதிப்பால் புதிதாக பாதிப்படைந்த மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டோர் நோய் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் செலுத்தப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது. இது மாநில அரசின் செய்திக்குறிப்பில் நாள்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

அதேபோல மத்திய அரசின் சார்பாக நாள்தோறும் நாட்டில் நோய் தொற்று பரவும் நோய்களின் தாக்கம் மற்றும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, குணமடைந்தவரின் எண்ணிக்கை, தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை எத்தனை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. எத்தனை பேர் எத்தனை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற புள்ளிவிபரங்கள் நாள்தோறும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த வேதத்தில் நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி ஆரம்பமானது இதில் முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதனடிப்படையில், கடந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து நாடு முழுவதும் 18 வயது நிறைவடைந்த எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்தது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 184 கோடிக்கும் அதிகமானோருக்கு நோய் புற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.முன் களப்பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட 2.30 கோடிக்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version