Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில்… இது ரொம்ப நல்ல விஷயமா இருக்கே!!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில்… இது ரொம்ப நல்ல விஷயமா இருக்கே!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன.

கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அத்துடன் சிறிது நாட்களுக்கு முன் தான் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த வருடம் அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் அரசு பள்ளிகள், மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கின்றது. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது ஊரடங்கு, நடுத்தர வர்க்க மக்களை மிகவும் பாதித்திருக்கிறது.

மேலும், தங்களது அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு போதிய பணம் இல்லாத காரணத்தினால், அரசு பள்ளியில் சேர்ப்பதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கிராமங்களில் பள்ளி ஆசிரியர்கள் ஒலிபெருக்கி மூலம், மாணவர்கள் படிக்கும் கல்விக்கும் அவர்களது மேம்பாட்டுக்கும் உத்தரவாதம் அளிப்பதாக, பெற்றோரிடம் உறுதி அளித்து வருகின்றனர். இதன் காரணமாக தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் தற்போது அரசு பள்ளியில் சேர்வதற்கு பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

பல பெற்றோர் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களது குழந்தைகளை தொடர்ந்து கல்வி கட்டணம் செலுத்த முடியாத காரணத்தினால், தமிழக அரசு பள்ளிகள் சேர்த்திருக்கின்றன. அரசு பள்ளிகளில் இலவச கல்வி முறை மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தற்போது மாறி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் பல உதவிகள் அனைத்தும் கிடைப்பதாலும் இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கூறியிருக்கின்றார்.

Exit mobile version