Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவனை கொடூரமாக அடித்து, காலால் எட்டி உதைத்த அரசு பள்ளி ஆசிரியர் மீது வன்கொடுமை சட்டம்.!!

கடலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவனை, ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்தும், காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் வகுப்புக்கு சரியாக வராமல் இருந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பள்ளி ஆசிரியர் அவனை முட்டி போட வைத்துள்ளார்.

அதன்பிறகு, அங்கு இருந்த பிரம்பால் அந்த மாணவனை கடுமையாக அடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் அந்த ஆசிரியர் அந்த மாணவனை தனது கால்களால் எட்டி உதைத்தும் இழிவாக பேசி மோசமாக அடித்துள்ளார்.

இதனை அங்கிருந்த சக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதனை அந்த மாணவர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.

தற்போது மாணவனை கொடுமையாக தாக்கிய ஆசிரியர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவியதையடுத்து. மாணவனை கொடுமையாக அடித்த ஆசிரியர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

https://twitter.com/ashok4thangaraj/status/1448350314613010434?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1448350314613010434%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news4tamil.com%2Fgovt-school-teacher-brutally-beat-the-student%2F

 

Exit mobile version