TN Government Schools: அரசு பள்ளிகளில் இப்போது பல வகையான புது மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வர வேண்டும் என முக்கிய முடிவு எடுத்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை மாணவ, மாணவியர்களுக்கு பல வகையான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாதம் ரூ.1000 என்ற கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான புத்தகம், மடிக்கணினி என படிக்க தேவையான அனைத்து பொருட்களும் இலவசமாக கிடைக்க வழிவகை செய்கிறது.
அந்த வகையில் தனியார் பள்ளி மாணவர்களை பார்த்து அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் அடைய கூடாது என்பதற்காக அவர்களின் உடைகளில் கூட ஒரே மாதிரியாக வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த நிலையில் மாணவர்கள் அனைவரையும் அவர்கள் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் கல்வி கற்க சரியான நேரத்தில் வந்தாலும் சில ஆசிரியர்கள் தனது கடமையை மறந்து பணிக்கு சரியாக வருவதில்லை.
இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு சரியாக வர வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த முறையில் மாணவர்களுக்கு தேவையான கல்வி மற்றும் பள்ளிகளில் உள்ள வசதிகள் முறையாக சென்றடைகிறதா என்பதை மிக முக்கியமாக கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் சரியாக உள்ளதா என மாவட்ட மற்றும் கல்வி அலுவலர்கள் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் கண்காணிப்பு தீவிரமாக உள்ளது.