Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசின் ஸ்பெஷல் தீபாவளி பரிசு!! உடனே வாங்கிகோங்க!! மிஸ் பண்ணிடாதிங்க!!

Govt's Special Diwali Gift!! Buy now!! Don't miss it!

Govt's Special Diwali Gift!! Buy now!! Don't miss it!

Tamil Nadu: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மளிகைப் பொருட்கள் அடங்கிய பல வகையான சிறப்புத் தொகுப்பு, கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து பல சிறப்பான திட்டங்கள் மக்களுக்காக செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உறவுகள் ஒன்று கூடி, மகிழ்ச்சி பொங்கி மனம் நிறைந்து கொண்டாடுவதே தீபாவளியாகும். அந்த தீபாவளியை ஏழை எளிய மக்கள் சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார்.

“கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற பெயரில் மளிகை பொருள்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை, வருகின்ற அக்டோபர் 28ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தீபாவளி சிறப்பு தொகுப்பு இரண்டு வகையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அது பிரீமியம் (Premium) மற்றும் எலைட் (Elite) என இரண்டு வகையாக பிரிக்கலாம். பிரீமியம் (Premium) தொகுப்பில் 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு ரூ.199- என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் எலைட் (Elite) தொகுப்பிலும் 14 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு ரூ.299 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதில் இருக்கும் 14 வகையான பொருட்கள் அனைத்தும் ஒன்றே, மளிகை பொருட்களின் அளவு மட்டுமே மாறுபடும். அது மட்டும் அல்லாமல் அதிரசம்-முறுக்கு காம்போ என்ற விற்பனை தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.190 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகுப்புகள் அனைத்தும் வெளி சந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இது  தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை  பண்டகசாலைகளில் கிடைக்கும் என கே. ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version