சேலத்தில் படிப்படியாக அதிகரித்து வரும் கொரோனா கட்டாயமாக்கப்பட்டது முககவசம் ! பீதியில் மக்கள்!!
சேலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. சற்று படிப்படியாக தொற்று குறைய தொடங்கியது. இதனால் மே மாதம் வரை தொற்று பரவல் ஓரிரு நபர்களுக்கு மட்டுமே இருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பரவல் அதிகமாகி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
ஒரே நாளில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. சேலம் மாநகராட்சி பகுதியில் மட்டும் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வீரபாண்டியில் ஐந்து பேருக்கும், தலைவாசல் மற்றும் மேட்டூரில் இரண்டு பேருக்கும், கெங்கவல்லி மற்றும் கொங்கணாபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மொத்தம் 25 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொற்று அதிக அளவில் பரவுவதால் சுகாதாரத்துறையினர் கடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ,வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிவேகமாக படையெடுத்து வருகிறது .
சேலம் மாவட்டத்தில்தான் அதிகளவு தோற்று பரவுவதாக கண்டறியப்பட்டது. எனவே அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை கூறப்பட்டுள்ளது.