Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் பிரம்மாண்ட திறப்பு விழா:! பிரதமர் மோடி வருகை!

இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் பிரம்மாண்ட திறப்பு விழா:! பிரதமர் மோடி வருகை!

பிரதமர் மோடி அவர்களால் கடந்த 2017 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிளாஸ்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. 24 ஏக்கரில் 1.470 கோடி செலவில் கட்டப்பட்ட 750 படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட எய்ம்ஸ் மருத்துவமனையை, இன்று முற்பகல் 11:30 மணி அளவில் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கின்றார்.

இந்த ஆண்டு இறுதியில் இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த மருத்துவமனையின் பணிகள் தீவிரமாக்கப்பட்டு தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இதனை இன்று பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்க இமாச்சலத்திற்கு வருகை தந்திருப்பதாகவும்,தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version