Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேரனுக்காக, தன் சொந்த பேத்தியை கடத்தி சென்ற பாட்டி!! தேடுதல் வேட்டையில் போலீசார்!!

ஆந்திர மாநிலத்தில் தனது மகன் வழி பேரனுக்கு திருமணம் செய்து முடிப்பதற்காக பதிநான்கு வயது சிறுமியான தனது மகள் வழி பேத்தியை அவர்களது பாட்டியே கடத்தி சென்ற சம்பவம் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம், திருச்சானூர் என்கிற பகுதியை சேர்ந்தவர் தான் மூதாட்டி வகுளம்மா ஆவார். இந்த மூதாட்டி தனது மகன் வழி பேரன் முரளி கிருஷ்ணா என்பவருக்கு தனது மகள் வழி பேத்தியான பதினான்கு வயது சிறுமியை திருமணம் செய்ய நினைத்து உள்ளார்.

மேலும், திருமணம் செய்து வைக்க எண்ணி அதனை சிறுமியின் வீட்டில் கூறியுள்ளார். ஆனால், இதனை சிறுமியின் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை, முழுவதும் மறுத்து விட்டனர். இந்த காரணத்தால் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமியை தனியாக கூப்பிட்டு சந்தித்த பாட்டி வகுளம்மா, தனது பேத்தியை கடத்தி சென்று உள்ளார்.

மகன் வழி பேரனுக்கு திருமணம் செய்து வைக்க, தனது சொந்த பேத்தியையே பாட்டி கடத்திய சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தலைமறைவான அந்த பாட்டியை தேடும் பணியில் ஆந்திர போலீஸ் வெகு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version