சின்னம்மை தொற்று நோயை 3 தினங்களில் குணமாக்கும் பாட்டி மருத்துவம்!

0
212
Grandma medicine cures smallpox infection in 3 days!

சின்னம்மை தொற்று நோயை 3 தினங்களில் குணமாக்கும் பாட்டி மருத்துவம்!

அம்மை நோய்களில் தட்டம்மை,பெரியம்மை,சின்னம்மை என்று பல வகைகள் இருக்கிறது.இதில் பெரும்பாலானோரை தாக்க கூடிய வைரஸ் தொற்று சின்னம்மை.இந்த அம்மை தொற்று ஏற்பட முக்கிய காரணம் வெரிசெல்லா என்ற வைரஸ் தொற்று தான்.

எனவே சின்னம்மை பாதித்தவர்கள் தங்களை தனிமை படுத்திக் கொள்வது நல்லது.வெரிசெல்லா வைரஸ் உடலில் நுழைந்த 2 வாரங்களுக்கு பின்னர் சின்னம்மை உருவாகிறது.அதன் பின்னர் 10 நாட்கள் வரை சின்னம்மை நோயின் தாக்கம் இருக்கும்.

சின்னம்மை அறிகுறிகள்:-

1)காய்ச்சல்
2)தொண்டை வலி
3)உடல் வலி
4)கை,கால் வலி
5)உடலில் அரிப்பை உண்டாக்கும் கொப்பளங்கள்

சின்னம்மை பாதித்தவர்களின் சளி,இருமல்,எச்சில் மூலம் பிறருக்கு வைரஸ் தொற்று பாதிக்கும் என்பதினால் இதில் கவனமாக இருப்பது அவசியம்.

சின்னம்மை பாதித்தவர்கள் உடலில் ஏற்பட்டிற்கும் கொப்பளங்களை உடைக்க கூடாது.அதனை தொடுவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

வேப்பிலைகளை அரைத்து நீரில் கலந்து சோப் இன்றி குளிக்கவும்.பின்னர் வேப்பிலையை பரப்பி அதன் மேல் படுக்கவும்.

சின்னம்மை பாதித்தவர்கள் துணிகளை வெந்நீரில் ஊறவைத்து வெயிலில் நன்றாக காயவைத்து உடுத்த வேண்டும்.வாழைப்பழம்,இளநீர்,நுங்கு போன்ற பொருட்களை சாப்பிடுவது நல்லது.மோர்,எலுமிச்சை சாறு அருந்துவது நல்லது.வேப்பிலையை கொதிக்க வைத்து குடித்து வந்தால் தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.கடுகு மற்றும் புளி சேர்த்த உணவுகளை சின்னம்மை சரியாகும் வரை எடுத்து கொள்ள வேண்டாம்.